/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமான சிறு பாலத்தை மாற்றாமல் புதிய சாலை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் பலன்
/
சேதமான சிறு பாலத்தை மாற்றாமல் புதிய சாலை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் பலன்
சேதமான சிறு பாலத்தை மாற்றாமல் புதிய சாலை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் பலன்
சேதமான சிறு பாலத்தை மாற்றாமல் புதிய சாலை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் பலன்
ADDED : ஜன 03, 2025 09:53 PM

பந்தலுார், ; பொன்னானி அருகே சேதமான சிறு பாலத்தை மாற்றாமல் புதிய சாலை அமைக்கும் பணி நடப்பதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பந்தலுார் அருகே பொன்னானி முதல் மாங்கம்வயல் செல்லும் சாலை மோசமான நிலையில் சேதமடைந்து காணப்பட்டது. இதனால், அவசர தேவைகளுக்கு வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன், விவசாயிகளும் தங்கள் விவசாய விளை பொருட்களை கொண்டு செல்லவும், வாகனங்கள் வந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது.
தொடர்ந்து, பிரதமர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2 -கோடி 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பழைய சாலை முழுமையாக பெயர்த்தெடுத்து, புதிய தார் சாலை அமைக்கும் பணி மேற்கொண்டுள்ள நிலையில், சில இடங்களில் பழைய சேதமடைந்த சிறு பாலங்களை அகற்றாமல், அதன் மீதே சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், புலியாடி என்ற இடத்தில், மழை காலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவில் மழை வெள்ளம் வந்து செல்லும் கால்வாயின் குறுக்கே, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சிறுபாலம் சேதமடைந்து காணப்படுகிறது.
இதனை மாற்றாமல் அதன் மீது சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால், வரும் மழை காலத்தில், பாலம் உடைந்தால் சாலை முழுமையாக துண்டிக்கப்படும்.
ஆனால், தேவையற்ற இடங்களில் சிறு பாலங்கள் அமைத்துள்ளதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, இதுகுறித்து ஆய்வு செய்து, மக்கள் பயன்பெறும் வகையில் சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
கூடலுார் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ரமேஷ்குமார் கூறுகையில், ''இதுகுறித்து புகார் வந்துள்ளது. நேரில் ஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தேவைப்படும் இடத்தில் சிறு பாலம் அமைத்து சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.