/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் 'டாஸ்மாக்' குடோனை ஊட்டிக்கு மாற்றினால் நலம்
/
குன்னுார் 'டாஸ்மாக்' குடோனை ஊட்டிக்கு மாற்றினால் நலம்
குன்னுார் 'டாஸ்மாக்' குடோனை ஊட்டிக்கு மாற்றினால் நலம்
குன்னுார் 'டாஸ்மாக்' குடோனை ஊட்டிக்கு மாற்றினால் நலம்
ADDED : ஆக 21, 2025 07:55 PM
ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில், 'லோடிங் மற்றும் அன்லோடிங் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் (சி.ஐ.டி.யு) மாவட்ட பேரவை கூட்டம், ஊட்டியில் உள்ள மா.கம்யூ., கட்சி அலுவலகத்தில் நடந்தது.
சங்க தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். சங்க நிர்வாகி ஹசன், சுமை சங்க நிர்வாகி மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யு., மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் பங்கேற்று பேசினார். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில், தலைவராக ரமேஷ், செயலாளராக ராஜன், பொருளாளராக மணிகண்டன் உட்பட, 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், 'வனவிலங்குகள் நடமாடும் குன்னுார் டாஸ்மாக் குடோனை மாவட்ட மைய பகுதியான, ஊட்டி நகரத்துக்கு மாற்ற வேண்டும், டாஸ்மாக் குடோனில் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், மாவட்டத்திலுள்ள சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு மாவட்ட கலெ க்டர் அறிவித்த குறைந்தபட்ச ஊதி யத்தை கொ டுக்க வேண்டும், நலவாரிய அலு வலகங்கள் தாலுகா அளவில் அமைக்க வேண்டும்,' என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
முடிவி ல், சி.ஐ.டி.யு., மாவட் ட செய லாளர் வினோத் உட்பட பலர் பங்கேற்றனர்.

