sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஊட்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் உள்ள கட்டடங்களில் களவாடப்படும் பொருட்கள்..? கண்டு கொள்ளாததால் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரிப்பு

/

ஊட்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் உள்ள கட்டடங்களில் களவாடப்படும் பொருட்கள்..? கண்டு கொள்ளாததால் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரிப்பு

ஊட்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் உள்ள கட்டடங்களில் களவாடப்படும் பொருட்கள்..? கண்டு கொள்ளாததால் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரிப்பு

ஊட்டி ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் உள்ள கட்டடங்களில் களவாடப்படும் பொருட்கள்..? கண்டு கொள்ளாததால் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரிப்பு


ADDED : ஆக 11, 2025 08:28 PM

Google News

ADDED : ஆக 11, 2025 08:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டியில் தோட்டக் கலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட, ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் உள்ள கட்டடங்களில் பொருட்கள் களவாடப்படுவது குறித்து போலீசார் விசாரணை ந டத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், வருவாய் துறையினருக்கு சொந்தமான, 52 ஏக்கர் நிலத்தில், 120 ஆண்டு காலமாக, 'மெட்ராஸ் ரேஸ் கிளப்' நிர்வாகம், குத்தகை அடிப்படையில் குதிரை பந்தயங்களை நடத்தி வந்தது. ஊட்டி கோடை சீசனின் போது முதல் நிகழ்ச்சியாக இங்கு, ஏப்., மாதம் குதிரை பந்தயம் நடப்பது வழக்கம்.

மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு 'சீல்' இந்நிலையில், மெட்ராஸ் ரேஸ்கிளப் நிர்வாகம், 1978ம் ஆண்டு முதல் குத்தகை தொகையை செலுத்தாமல் இருந்தது. இதுவரை, 822 கோடி ரூபாய் குத்தகை தொகை நிலுவையில் வைத்துள்ளது. இது தொடர்பான வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இதனை விசாரித்த கோர்ட், 2001ம் ஆண்டுக்கு பின், குத்தகை தொகை செலுத்த அறிவுறுத்தியது. இருப்பினும் குத்தகை தொகையை ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் செலுத்தவில்லை.

இதை தொடர்ந்து, கடந்தாண்டு ஜூன், 21ம் தேதி, மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு வருவாய் துறை 'நோட்டீஸ்' அனுப்பியது. அந்த நோட்டீசுக்கும் மெட்ராஸ் கிளப் நிர்வாகம் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், ஐகோர்ட் உத்தரவின்படி, வருவாய் துறையினர் போலீசார் உதவியுடன், நிலத்தை கையகப்படுத்தி, அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். குதிரை பந்தயம் மைதானத்திற்குள் உள்ள அலுவலகக் கட்டடங்கள் மற்றும் நிர்வாகக் கட்டடங்கள் அனைத்தும் 'சீல்' வைக்கப்பட்டன.

சூழல் பூங்காவுக்கு,ரூ.76 கோடி ஒதுக்கீடு ஊட்டியில் அரசால் மீட்கப்பட்ட இடம் சதுப்பு நிலமாக உள்ளதால், 'இந்த நிலத்தை பாதுகாக்க வேண்டும்,' என, பல சுற்றுசூழல் அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தன. இதனை ஆய்வு செய்த அரசு அதகிாரிகள், மாநில அரசுக்கு தெளிவான அறிக்கை அனுப்பினர். அதன்பின், மாநில அரசு, 76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தோட்டக்கலை துறை சார்பில், சூழல் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்தது.

தொடர்ந்து, கடந்த, 6 மாதங்களுக்கு முன்பு பூர்வாங்க பணிகள் துவங்கின. ஆரம்பத்தில் ஆர்வம் காட்டிய, அரசும், தோட்டக்கலை துறையும் தற்போது, போதிய அக்கறை காட்டவில்லை.

இங்கு கண்காணிப்பு பணிகளும் போதிய அளவில் இல்லை. யாரும் கண்டு கொள்ளாத நிலையில், கடந்த சில மாதங்களாக சமூக விரோதிகள் இரவில் அப்பகுதிக்கு வந்து, அங்குள்ள மரப் பொருட்கள்; இரும்பு பொருட்களையும் ஒவ்வொன்றாக களவாடி சென்றது தெரியவந்துள்ளது. தோட்டக்கலை துறையினரும் இதுகுறித்து முறையான புகார் ஏதும் போலீசில் அளிக்கவில்லை.

ஊட்டி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கூறுகையில்,'' இது பற்றி தோட்டக்கலை துறையினர் புகார் ஏதும் அளிக்கவில்லை. அப்பகுதி பொது மக்களின் தகவலின் பெயரில் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகிறோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us