/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜெ., பிறந்த நாள் விழா அ.தி.மு.க., நலத்திட்ட உதவி
/
ஜெ., பிறந்த நாள் விழா அ.தி.மு.க., நலத்திட்ட உதவி
ADDED : பிப் 25, 2024 11:11 PM
ஊட்டி;ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் அ.தி.மு.க., சார்பில், முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
* ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வினோத் தலைமை வகித்தார். கட்சி அமைப்பு செயலாளர் அர்ஜூணன், எம்.ஜி.ஆர்., மன்ற மாநில துணை செயலாளர் தேனாடு லட்சுமணன், மாவட்ட துணை செயலாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, 500 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
* ஊட்டி எல்லநள்ளி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கட்சி கொடியேற்றி, கேக் வெட்டி இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், 200 பேருக்கு வேட்டி சேலை வழங்கப்பட்டது. பெண்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு, கிரைண்டர், மிக்கி மற்றும் மின்காந்த அடுப்பு பரிசு வழங்கப்பட்டது.
* ஊட்டி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, எப்பநாடு கிராமத்தில் நடந்த விழாவில், ஜெ., படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. கட்சி கொடியேற்றப்பட்டு, கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

