/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜெ., நினைவு கோப்பை கால்பந்து பரலட்டி அணி வெற்றி
/
ஜெ., நினைவு கோப்பை கால்பந்து பரலட்டி அணி வெற்றி
ADDED : மே 13, 2025 10:48 PM

கோத்தகிரி, ; கோத்தகிரியில் நடந்த கால்பந்து போட்டியில், பரலட்டி அணி வெற்றி பெற்றது.
கோத்தகிரி கடைக்கம்பட்டி மைதானத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு கோப்பை கால்பந்து போட்டி நடந்தது.
இந்த போட்டியில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து, 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடின.
இறுதி போட்டி, ஊட்டி பரலட்டி மற்றும் கோத்தகிரி உயிலட்டி அணிகளுக்கு இடையே நடந்தது.
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., சாந்தி ராமு ஆகியோர், போட்டியை துவக்கி வைத்தனர்.
மிகவும் பரபரப்பாக நடந்த இப்போட்டியில், பரலட்டி அணி, 2:1 என்ற கோல் கணக்கில், உயிலட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு, ஊர் தலைவர் ஆலா கவுடர் தலைமையில் பரிசுகள் அளிக்கப்பட்டன.