/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் தேவாலா பகுதியில் அதிகரிக்கும் மஞ்சள் காமாலை
/
பந்தலுார் தேவாலா பகுதியில் அதிகரிக்கும் மஞ்சள் காமாலை
பந்தலுார் தேவாலா பகுதியில் அதிகரிக்கும் மஞ்சள் காமாலை
பந்தலுார் தேவாலா பகுதியில் அதிகரிக்கும் மஞ்சள் காமாலை
ADDED : நவ 24, 2024 11:05 PM
பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா பகுதியில் பலர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழக எல்லையை ஒட்டிய கேரளா மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளில், கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோய் அதிகரித்து வருகிறது. இதனால், 'நீலகிரி எல்லையில் வாழும் பொதுமக்கள் குளிர்ச்சியான தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை உட்கொள்ள கூடாது,' என, சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், பந்தலுார் அருகே தேவாலா, போக்கர் காலனி பகுதியில், 15க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, கேரளா மாநில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், குழந்தைகளுக்கும் நோய் ஏற்பட்டுள்ளதால் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.
வட்டார அலுவலர் கதிரவன் கூறுகையில்,''அந்த கிராமத்தில் தொடர்ச்சியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. குடிநீர் மற்றும் ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்தபின், நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்,'' என்றார்.