/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜெடையசுவாமி கோவில் குண்டம் திருவிழா
/
ஜெடையசுவாமி கோவில் குண்டம் திருவிழா
ADDED : பிப் 11, 2025 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி; கோத்தகிரி நெடுகுளா ஜெடையசுவாமி கோவிலில், குண்டம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பகல், 2:00 மணிக்கு, விரதம் இருந்த பக்தர்கள் பூகுண்டம் இறங்கினர். தொடர்ந்து, ஐயனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. பஜனை, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, அன்னதானம் இடம்பெற்றது. நெடுகுளா சுற்றுவட்டார பகுதியில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் ஐயனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, ஊர் தலைவர் மணியகார பெள்ளாகவுடர் தலைமையில், பொதுமக்கள் செய்திருந்தனர்.

