/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடையை வரவேற்கும் ஜெகரண்டா மலர்கள்
/
கோடையை வரவேற்கும் ஜெகரண்டா மலர்கள்
ADDED : பிப் 20, 2025 09:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார் ; பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட தேயிலை தோட்டம், சாலையோரங்களில் பல்வேறு மரங்களை நடவு செய்யப்பட்டன.
அதில், ஊதா நிறத்தில் பூத்து குலுங்கும் ஜெகரண்டா பூக்கள் மரங்கள் அதிக அளவில், தேயிலை தோட்டங்களில் நடவு செய்யப்பட்டது
நூற்றாண்டுகள் கடந்தும் இந்த மரங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் காணப்படுகின்றன. தற்போது, கோடையை வரவேற்கும் விதமாக, இப்பகுதியில் ஜெகரண்டா மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
கூடலுாரில் இருந்து நெலாக்கோட்டை வழியாக வயநாடு செல்லும் பயணிகள் இவற்றை கண்டு ரசித்து போட்டோ, வீடியோ எடுத்து செல்கின்றனர்.

