/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஐந்து ஆண்டுகள் முயற்சியில் 'ஜெட் பிளான்ட்'; பழ கண்காட்சியில் காட்சிப்படுத்த ஏற்பாடு

ADDED : ஏப் 08, 2025 09:31 PM

குன்னுார்; குன்னுார் சிம்ஸ்பூங்காவில், ஐந்த ஆண்டுகள்முயற்சியில், ஜெட் பிளான்ட் எனப்படும் தென் அமெரிக்காவை சேர்ந்த 'கோலெக்ஷியா பாரடொக்ஸா' என்றஅரிய வகை செடிகளை வளர்த்து பழ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
குன்னுார் சிம்ஸ் பூங்காவில் நம் நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மலர் செடிகள் நடவு செய்து பராமரிக்கப்படுகிறது.
பூங்காவில், 5 ஆண்டுகள் முயற்சியில், முதல் முறையாக தொட்டிகளில் வளர்க்கப்பட்ட, 'கோலெக்ஷியா பாரடொக்ஸா' தாவரபெயர் கொண்ட கள்ளி செடிகளில், மலர்கள் பூக்க துவங்கியுள்ளது. இவை சிம்ஸ்பூங்கா, ஊட்டி தாவரவியல் பூங்காக்களில் வளர்க்கப்படுகிறது.
சிம்ஸ்பூங்கா மேலாளர் லட்சுமணன் கூறுகையில், ''இந்த தாவரம், தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. ராம்னேசி குடும்பத்தை சேர்ந்தது.
விமானம் போன்றதால், ஜெட் பிளான்ட் எனவும், ஊக்குகள் போன்றதால் 'ஆங்கர் பிளான்ட்' எனவும் அழைக்கின்றனர். செப்., இதன் சீசன் காலமாக இருந்தாலும், ஜன., முதல் ஏப்., மாதங்களிலும் பூக்கிறது. பூக்கள், வானில் நட்சத்திரத்தின் வடிவமாக காணப்படுவது இதன் சிறப்பு. இலையுதிர் காலங்களில் பூக்களின் நறுமணம் அனைவரையும் ஈர்க்கிறது,'' என்றார்.
10 தொட்டிகளில், வளர்க்கப்பட்ட இந்த மலர் செடிகள், வரும் மே, 23 முதல் 25ம் தேதி வரை நடக்கும், பழ கண்காட்சியில், காட்சிபடுத்தப்பட உள்ளது.