/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகை ஏழு லட்சம் பணம் திருட்டு
/
ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகை ஏழு லட்சம் பணம் திருட்டு
ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகை ஏழு லட்சம் பணம் திருட்டு
ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகை ஏழு லட்சம் பணம் திருட்டு
ADDED : மே 14, 2025 11:02 PM
பாலக்காடு; பாலக்காட்டில், பூட்டிய வீட்டில் இருந்து, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும், 7 லட்சம் ரூபாயும் திருட்டு போன சம்பவம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு கல்மண்டபம் பிரதிபா நகரை சேர்ந்தவர் சிவதாஸ். இவர் இரு நாட்களுக்கு முன், வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் திருவனந்தபுரத்துக்கு சுற்றுலா சென்றார். இந்நிலையில், வீட்டில் வேலை செய்யும் பெண், நேற்று காலை வாசல் சுத்தம் செய்தவற்காக வந்து போது, வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டனர். இத்தகவலை ஊர் மக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி (கசபா) போலீசார், நடத்திய பரிசோதனையில் படுக்கையறையில் உள்ள அலமாரியில் வைத்திருந்த, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும், 7 லட்சம் ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவு காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி, விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.