/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜான் சல்லிவன் நினைவக சாலை படுமோசம் சீசன் நேரத்தில் வரும் சுற்றுலா பயணிகள் அதிருப்தி
/
ஜான் சல்லிவன் நினைவக சாலை படுமோசம் சீசன் நேரத்தில் வரும் சுற்றுலா பயணிகள் அதிருப்தி
ஜான் சல்லிவன் நினைவக சாலை படுமோசம் சீசன் நேரத்தில் வரும் சுற்றுலா பயணிகள் அதிருப்தி
ஜான் சல்லிவன் நினைவக சாலை படுமோசம் சீசன் நேரத்தில் வரும் சுற்றுலா பயணிகள் அதிருப்தி
ADDED : மே 20, 2025 10:46 PM

கோத்தகிரி, ; கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் அமைந்துள்ள, சல்லிவன் நினைவகம் செல்லும் சாலை, மிகவும் மோசமாக உள்ளதால், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் அலுவலகம், கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் அமைந்துள்ளது. சிதிலம் அடைந்த கட்டடம், பாராம்பரியம் மாறாமல் புனரமைக்கபட்டு, தற்போது, நீலகிரி ஆவண காப்பகமாக செயல்பட்டு வருகிறது.
இதனால், கல்லுாரி மாணவர்கள் ஆய்வுக்காக, இந்த காப்பகத்தை பயன்படுத்தி வருகின்றனர். தவிர, முதல் கலெக்டர் அலுவலகம் என்பதால், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இங்கு வந்து, காப்பகத்தில் இடம்பெற்றுள்ள பதிவுகளை கண்டுகளித்து செல்கின்றனர்.
ஆண்டுதோறும், சல்லிவனின் பிறந்தநாள் மற்றும் இறந்தநாள் நிகழ்ச்சிகளில், மாவட்ட கலெக்டர் தலைமையில், நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், கூக்கல் தொறை முக்கிய சாலையில் இருந்து, நினைவகம் செல்லும், 200 மீட்டர் துார சாலை சீரமைக்கப்படாமல், குழிகள் ஏற்பட்டு சேதமடைந்து காணப்படுகிறது.
இச்சாலையை, நாள் ஒன்றுக்கு சராசரியாக, 100 முதல், 150 பார்வையாளர்கள், உள்ளூர் மக்களின் வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயம் தேவைக்காகவும், கேஸ் சிலிண்டர் வாகனங்கள் வந்து செல்வதிலும் சிக்கல் நீடிக்கிறது.
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு, சாலை அமைக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து எவ்வித பராமரிப்பு பணியும் நடைபெறவில்லை. இது குறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கன்னேரிமுக்கு கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சுந்தர் கூறுகையில், ''ஜான் சல்லிவன் நினைவகம், முக்கியத்துவம் பெற்ற ஆவண காப்பகமாக விளங்கிறது. அவரது நினைவாக, அருகில் பூங்காவும் அமைந்துள்ளது. இதனால், பார்வையாளர்களின் வருகை அதிகரித்து வருவதால், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.