தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் : மாற்று சான்றிதழ் பெற்று தந்த நீதிபதிகள்

 கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் : மாற்று சான்றிதழ் பெற்று தந்த நீதிபதிகள்

 கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் : மாற்று சான்றிதழ் பெற்று தந்த நீதிபதிகள்


ADDED : நவ 29, 2025 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுார் அருகே கைதக்கொல்லி பகுதியை சேர்ந்த அஷ்வந்த், ஸ்ரீசாந்த் இருவரும் கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வந்தனர்.

தொடர்ந்து, கட்டணம் செலுத்த வழி இல்லாத நிலையில், படிப்பை பாதியில் நிறுத்தினர். ஆனால், இவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க மறுத்த, கல்லுாரி நிர்வாகம் முழு கட்டணத்தையும் செலுத்த வலியுறுத்தியது. இது குறித்து மாவட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் நீதிபதி பாலமுருகன் மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் நீதிபதி பிரபாகரன் ஆகியோரிடம், தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் தகவல் தெரித்தார். தொடர்ந்து, சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கல்லுாரி நிர்வாகத்திற்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.

அதனையடுத்து, கல்லுாரி நிர்வாகம், 2- மாணவர்களுக்கும் மாற்று சான்றிதழை, எந்தவித கட்டணங்களும் பெறாமல் திருப்பி கொடுத்தது. இந்த இரண்டு மாணவர்களில் ஒருவர் கூடலுார் அரசு கலைக் கல்லூரியிலும், மற்றொருவர் உப்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும் சேர்ந்து படித்து வருகின்றனர்.

எந்தவித கட்டணமும் இன்றி தங்களுக்கு சான்றிதழை பெற்று தந்த, நீதிபதிகள் பாலமுருகன் மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு மாணவர்களின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us