UPDATED : நவ 22, 2026 05:13 PM
ADDED : நவ 22, 2026 05:00 PM

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணியருக்காக, 'ஜூஸ்' விற்பனை செய்யப்படுகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு, வார விடுமுறை நாட்களில், 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தற்போது, காலை நேரத்தில், நீர் பனிப் பொழிவும், பகல் நேரத்தில் வெயிலான காலநிலை நிலவுகிறது.
இந்த காலநிலை சுற்றுலா பயணிகளுக்கு, இதமாக அமைந்துள்ளது. இதனால், மாநிலத்தின் சமவெளி பகுதிகளில் இருந்தும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக, சுற்றுலா பயணியர் பூங்காவில் அதிக நேரத்தை செலவிடுக்கின்றனர். வெயில் காரணமாக, பயணியர் தாகத்தை தணிக்க, பூங்கா நிர்வாகம், திராட்சை, லெமன் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு 'ஜூஸ்' வகைகளை, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை சுற்றுலா பயணியர் ஆர்வத்துடன், அருந்தி தாகத்தை தணித்து செல்கின்றனர்.
