/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜூனியர் கால்பந்து போட்டி; வீரர், வீராங்கனைகள் தேர்வு
/
ஜூனியர் கால்பந்து போட்டி; வீரர், வீராங்கனைகள் தேர்வு
ஜூனியர் கால்பந்து போட்டி; வீரர், வீராங்கனைகள் தேர்வு
ஜூனியர் கால்பந்து போட்டி; வீரர், வீராங்கனைகள் தேர்வு
ADDED : ஜூன் 11, 2025 08:47 PM
ஊட்டி; நீலகிரி கால்பந்து சங்கம் சார்பில் ஜூனியர் கால்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறது.
நீலகிரி மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் மோகன முரளி கூறியதாவது:
மாநில அளவிலான, 16 வயதிற்கு உட்பட்ட ஜூனியர் ஆண்கள் கால்பந்து போட்டி தொடர் விருதுநகர் மாவட்டத்தில் நடக்கிறது. அதில், பங்கேற்கும் நீலகிரி மாவட்ட அணியை தேர்வு செய்யும் முகாம், 12, 13 ஆகிய தேதிகளில் நடக்கிறது. 12ம் தேதி (இன்று) மாலை 3:00 மணிக்கு கோத்தகிரி காந்தி மைதானத்திலும், 13 தேதி காலை 11:00 மணிக்கு ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானத்திலும் , கூடலுார் ேஹாலி கிராஸ் பள்ளியிலும் நடக்கிறது.
பங்கேற்கும் கால்பந்து வீரர்கள், 2010 ம் ஆண்டு ஜன., 1ம் தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை அசல் எடுத்து வர வேண்டும். பங்கேற்க வரும் வீரர்கள் சீருடைகளை எடுத்து வர வேண்டும். இதேபோல, மாநில அளவிலான ஜூனியர் பெண்கள் கால்பந்து போட்டி தொடர் திண்டுக்கல் மாவட்டத்தில், 18ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடக்கிறது. 12ம் தேதி காலை, 11:00 மணிக்கு குன்னுார் புனித ஜோசப் பெண்கள் கான்வென்ட்டில் நடக்கிறது.
தேர்வு முகாமில் பங்கேற்கும் வீராங்கனைகள், 2009ம் ஆண்டு ஜன., 1ம் தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, 14ம் தேதி முதல் கால்பந்து பயிற்சிகள் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.