/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கள்ள சாராயத்திற்கு எதிராக கலைப்பயண விழிப்புணர்வு பிரசாரம்
/
கள்ள சாராயத்திற்கு எதிராக கலைப்பயண விழிப்புணர்வு பிரசாரம்
கள்ள சாராயத்திற்கு எதிராக கலைப்பயண விழிப்புணர்வு பிரசாரம்
கள்ள சாராயத்திற்கு எதிராக கலைப்பயண விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : மார் 12, 2024 01:11 AM

ஊட்டி:ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், கள்ள சாராயத்திற்கு எதிராக கலை பயண விழிப்புணர்வு பிரசாரம் துவக்கி வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை சார்பில், கள்ளச்சாராயம் மற்றும் அதன் தீமைகள் குறித்து, கலை பயணம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலை பயண விழிப்புணர்வு பிரச்சாரத்தை, கலெக்டர் அருணா துவக்கி வைத்தார். தஞ்சை ஸ்ரீஹரி நாட்டுப்புற கலைக்குழு, மாவட்ட முழுவதும் பிரசாரத்தை மேற்கொள்கிறது.
அதில், 'மது அருந்துவதன் விளைவுகள், மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகள், மது அருந்துவதால் ஏற்படும் தவறான எண்ண ஓட்டங்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுகிறது.
மேலும், மாரடைப்பு, நரம்பு தளர்ச்சி, கைகால் நடுக்கம் உண்டாகுதல், ஜீரண சக்தி குறைபாடு, பசியின்மை, கண் பார்வை பறிபோகுதல், மலட்டுத்தன்மை உண்டாகுதல், குறித்தும், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களின் தீமைகள்,' குறித்து கலை குழுவினர், கரகாட்டம் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நிகழ்ச்சியில், துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

