/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீர் ததும்பி காட்சியளிக்கும் காமராஜர் சாகர் அணை
/
நீர் ததும்பி காட்சியளிக்கும் காமராஜர் சாகர் அணை
ADDED : ஜூன் 26, 2025 09:21 PM
ஊட்டி; ஊட்டி காமராஜர் சாகர் அணை முழு கொள்ளளவு எட்டி உள்ளதால் வன விலங்குகளுக்கு குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை.
ஊட்டி -கூடலுார் சாலையில் காமராஜர் சாகர் அணை உள்ளது. இங்குள்ள நீரோடையிலிருந்து வரும் தண்ணீர் காமராஜர் சாகர் அணையில் சேகரமாகிறது. கடந்த சில நாட்களாக பரவலாக தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் வினாடிக்கு, 150 முதல் 200 கன அடி வரை நீர்வரத்து அதிகரித்தது. முழு கொள் ளளவான, 55 அடியை எட்டி நீர் ததும்பி காணப்படுகிறது.
இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மரவக்கண்டி, சிங்காரா மற்றும் மாயார் ஆகிய மின் நிலையங்களில் மின் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது.
வனத்துறை நிம்மதி
தவிர, கோடை காலங்களில் முதுமலை வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்க இந்த அணையில் இருந்து அவ்வப்போது நீர் திறக்கப்படுகிறது. தற்போது, அணை முழு கொள்ளளவு எட்டியதால் அணையை நம்பி உள்ள மின் நிலையங்களில் தேவைக்கேற்ப தண்ணீர் வினியோகிக்க முடிகிறது. அதே வேளையில் தடையின்றி மின் உற்பத்தியும் மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, முதுமலை வனப்பகுதியில் விலங்குகளுக்கான குடிநீர் தொட்டி களில் சேகரிக்கப்படும் தண்ணீரை வனவிலங்குகள் பருகி தாகத்தை தீர்த்து வருகின்றன.