நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; 'குயின் ஆப் ஹில்ஸ் ஸ்போர்ட்ஸ் கராத்தே டூ' சங்கம் சார்பில், ஊட்டி அண்ணா உள் விளையாட்டு அரங்கில், 15வது நீலகிரி கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
மாவட்டம் முழுவதும், 150 மாணவ, மாணவியர் பங்கேற்று தனி திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, குன்னுார் நீதித்துறை மாஜிஸ்திரேட் அப்துல் சலாம் பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கினார்.
முன்னதாக, வெற்றி பெற்றவர்கள் அடுத்த ஆண்டு, 4ம் தேதி நடக்கும், 41வது மாநில கராத்தே போட்டியில் பங்கேற்க உள்ளனர். சங்க தலைவர் இணையத்துல்லா வரவேற்றார். செயலாளர் பழனிவேல் நன்றி கூறினார்.

