/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கராத்தே மாநில போட்டி; நீலகிரி குழுவினருக்கு பாராட்டு
/
கராத்தே மாநில போட்டி; நீலகிரி குழுவினருக்கு பாராட்டு
கராத்தே மாநில போட்டி; நீலகிரி குழுவினருக்கு பாராட்டு
கராத்தே மாநில போட்டி; நீலகிரி குழுவினருக்கு பாராட்டு
ADDED : ஜன 12, 2025 10:53 PM
குன்னுார்; சென்னையில் நடந்த, 42வது மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் சாதித்த, நீலகிரி மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
குன்னுார் 'குயின் ஆஃப் ஹில்ஸ் கராத்தே' பயிற்சி மைய மாணவ, மாணவியர் கடந்த, 4, 5 தேதிகளில் சென்னையில், தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டூ சங்கம் சார்பில் நடந்த, 42வது மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், பங்கேற்றனர். அதில், 13 பேர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
சீனியர் பிரிவில் மாணவி அன்னபூரணி, 3வது இடத்தை பிடித்தார். மேலும், பிற போட்டிகளில் வெற்றி பெற்ற, அருண்குமார், லிங்கராஜன், கமலேஷ்வரன், ஸ்ரீநாத், ஹரிணி, சரண், ஈஸ்வர நவீன், நந்தினி, பிரியா, நரேஷ், எபின் பிளாசிட், யாழினி, மேகநாதன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குன்னுார் சங்கத்தின் தலைவர் சென்செய் இனயத்துல்லா, ரென்ஷி பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.