/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கர்நாடகா பூங்காவில் நுழைவு கட்டணம் திடீர் உயர்வு; சுற்றுலா பயணியர் அதிருப்தி
/
கர்நாடகா பூங்காவில் நுழைவு கட்டணம் திடீர் உயர்வு; சுற்றுலா பயணியர் அதிருப்தி
கர்நாடகா பூங்காவில் நுழைவு கட்டணம் திடீர் உயர்வு; சுற்றுலா பயணியர் அதிருப்தி
கர்நாடகா பூங்காவில் நுழைவு கட்டணம் திடீர் உயர்வு; சுற்றுலா பயணியர் அதிருப்தி
ADDED : அக் 22, 2024 11:45 PM
ஊட்டி : ஊட்டி அருகே கர்நாடகா தோட்டக்கலை பூங்காவில் நுழைவு கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதால் சுற்றுலா பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஊட்டி அருகே பர்ன்ஹில் பகுதியில், 30 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள கர்நாடகா அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டதால், கர்நாடகா பூங்காவுக்கான சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், கர்நாடகா அரசு தோட்டக்கலை துறை பூங்காவில் பெரியவர்களுக்கு, 50 ரூபாய், சிறியவர்களுக்கு, 25 ரூபாய் என வசூலிக்கப்பட்ட நுழைவுக் கட்டணம், தற்போது, உயர்ந்ததால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ''பூங்கா நுழைவு கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளான நிலையில், கர்நாடகா தோட்டக்கலை துறை செயலர் ஆய்வு செய்தார்.
அவரின் அறிவுறுத்தல் படி நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளை கவர, 300 அடி துாரம் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது தரையில் இருந்து, 100 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.
பூங்காவில் இயற்கையாக உற்பத்தியாகும் ஊற்று தண்ணீர், 4 குட்டைகளில் சேகரமாகும் வகையில் தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன.
பல்வேறு சிறப்பம்சங்கள், வாகனங்கள் நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை,'' என்றார்.