/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கருமாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு
/
கருமாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு
ADDED : மார் 21, 2025 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: கோத்தகிரி டானிங்டன் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் புனரமைக்கப்பட்ட நிலையில், ஜன., 31ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, கோத்தகிரியில் பல்வேறு சமுதாயத்தினர் மற்றும் உபயதாரர்கள் சார்பில் நாள்தோறும், மண்டல பூஜை நடந்தது. அம்மனுக்கு, அபிஷேக அலங்கார பூஜையுடன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று, அம்மனுக்கு அதிகாலை முதல், அலங்கார அபிஷேக மலர் வழிபாடு நடந்தது.
ஸ்ரீ சக்தி சேவா தலைவர் போஜராஜன் தலைமையில், தீர்த்த குடம் ஏந்திய பக்தர்கள் கோவிலை அடைந்தனர்.
தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.