/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீடுகளை சேதப்படுத்தும் கட்டை கொம்பன்
/
வீடுகளை சேதப்படுத்தும் கட்டை கொம்பன்
ADDED : ஜன 20, 2024 01:34 AM

பந்தலுார்:பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், உணவுக்காக குடியிருப்புகளை சேதப்படுத்தும் கட்டை கொம்பன் யானையை பிடிக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கூடலுார் சேரம்பாடி, தேவாலா, பிதர்காடு வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக கட்டை கொம்பன் என்று அழைக்கப்படும் யானை, அரிசி மற்றும் உணவு பொருட்கள் உட்கொள்வதை விருப்பமாக கொண்டுள்ளது.
இரவு, 7:00 மணிக்கு மேல் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் யானை வீடுகளை சேதப்படுத்தி உணவு பொருட்களை உட்கொள்கிறது.
பள்ளிக்கூட சத்துணவு கூடங்களை உடைத்து, அரிசி மூட்டைகளை துாக்கி செல்கிறது.
இந்த பகுதியில் பழங்குடியின மக்கள் வெறும் குடிசை வீடுகளில் வாழ்ந்து வரும் நிலையில், இரவு நேர உறக்கத்தின் போது, இந்த யானை உள்ளே நுழைந்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும்.
பழங்குடியினர் கூறுகையில், 'இங்கு சுற்றி வரும் கட்டை கொம்பன் யானையை, பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.