/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி அத்துமீறல்கள்
/
கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி அத்துமீறல்கள்
ADDED : பிப் 04, 2026 05:45 AM
ஊட்டி: 'கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி அத்துமீறல்களை தடுக்க வேண்டும்,' என, ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
ஊட்டியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.பி.நிஷா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், 'நீலகிரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி, தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும். வெளி மாநில மதுபானங்கள் விற்பனை செய்வது தடுப்பது போன்றவைகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்துவது,' குறித்து விவாதிக்கப்பட்டது.
விபத்துக்களை குறைக்கும் வகையில் எடுக்க வேண்டிய சாலை பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. பழங்குடியின கிராமங்களில் பழங்குடி யின மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கு சென்று பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். என அறிவுறுத்தப்பட்டது. கூடுதல் எஸ்.பி., ஆர்.டி.ஓ.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

