/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பைக் மீது மோதிய கேரள பஸ்: கணவன் பலி; மனைவி படுகாயம்
/
பைக் மீது மோதிய கேரள பஸ்: கணவன் பலி; மனைவி படுகாயம்
பைக் மீது மோதிய கேரள பஸ்: கணவன் பலி; மனைவி படுகாயம்
பைக் மீது மோதிய கேரள பஸ்: கணவன் பலி; மனைவி படுகாயம்
ADDED : ஜன 31, 2025 11:14 PM
ஊட்டி; கேரள அரசு பஸ் இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில், வெளிநாட்டில் சுற்றுலா வழிகாட்டியாக வேலை பார்த்த கேரள வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கேரள மாநிலம், வயநாடு பகுதியை சேர்ந்தவர் சபீர்,31. இவரது மனைவி அஸ்மிதா,25. இவர்களுக்கு, 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சபீர் அரபு நாட்டில் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் ஊட்டிக்கு வந்து கொண்டிருந்தார். தொடர்ந்து, இரவு, 8.45 மணியளவில் ஊட்டி அருகேயுள்ள காமராஜர் அணை பாலம் அருகே, வந்து கொண்டிருந்தனர். அப்போது, ஊட்டியில் இருந்து, கண்ணனுார் செல்லும் கேரள அரசு பஸ் பைக் மீது மோதியது. அதில், இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதி துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் ஆம்புலன்சில், சிகிச்சைக்காக, ஊட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, வழியில் சபீர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அஸ்மிதா, படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஊட்டி பதுமந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கேரள மாநிலத்தை சேர்ந்த பஸ் டிரைவர் சாஜியை கைது செய்தனர்.