/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தமிழக நோயாளிகள் பயன்பெற கேரள மருத்துவமனை சிறப்பு அட்டை
/
தமிழக நோயாளிகள் பயன்பெற கேரள மருத்துவமனை சிறப்பு அட்டை
தமிழக நோயாளிகள் பயன்பெற கேரள மருத்துவமனை சிறப்பு அட்டை
தமிழக நோயாளிகள் பயன்பெற கேரள மருத்துவமனை சிறப்பு அட்டை
ADDED : செப் 30, 2024 10:56 PM
பந்தலுார் : -கேரள வயநாடு தனியார் மருத்துவமனையில் எல்லையோரம் வசிக்கும், தமிழக மக்கள் சிகிச்சை பெற சிறப்பு மருத்துவ அட்டை வழங்கப்பட்டது.
பந்தலுாரில் உள்ள பள்ளி வாசல் கூட்ட அரங்கில், மாநில எல்லையில் உள்ள தமிழக மக்கள் பயன்பெற சிறப்பு மருத்துவ அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகி அப்துல் சலாம் சக்காபி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., திராவிட மணி தலைமை வகித்தார்.
கேரள மாநிலம் மேப்பாடி மூப்பன்ஸ் மருத்துவ கல்லுாரி மருத்துமனை கூடுதல் பொது மேலாளர் சூப்பி பலருக்கு மருத்துவ அட்டையை வழங்கி பேசுகையில், ''எங்கள் கல்லுாரியில் அனைத்து நவீன வசதிகளும் இருந்ததால், மேப்பாடி நிலச்சரிவின்போது சிக்கிய, 480 பேருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது.
''180 பேர் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுஅவர்கள் உயிரை காப்பாற்றவும் முடிந்தது. இதற்காக, 44 லட்சம் ரூபாய் செலவு ஏற்பட்ட நிலையில், அவை முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது, மாநில எல்லையில் பாதிக்கப்பட்ட, தமிழக மக்களுக்கு வழங்கப்படும் சிறப்பு மருத்துவ அட்டையின் மூலம், அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும், 30 சதவீதம் வரை மருத்துவ செலவு குறைக்கப்படும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், 300- பேருக்கு மருத்துவ அட்டை வழங்கப்பட்டது. வியாபாரிகள் சங்கத் தலைவர் அஷ்ரப், எஸ்.ஒய்.எஸ். செயலாளர் உம்மர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.முஸ்லிம் ஜமாத் செயலாளர் டி.உம்மர் நன்றி கூறினார்.