/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதிய ரக துப்பாக்கி பறிமுதல்: தோட்டா விற்ற கேரள நபர் கைது
/
புதிய ரக துப்பாக்கி பறிமுதல்: தோட்டா விற்ற கேரள நபர் கைது
புதிய ரக துப்பாக்கி பறிமுதல்: தோட்டா விற்ற கேரள நபர் கைது
புதிய ரக துப்பாக்கி பறிமுதல்: தோட்டா விற்ற கேரள நபர் கைது
ADDED : பிப் 20, 2024 11:09 PM

பந்தலுார்;பந்தலுார் அருகே வேட்டை கும்பலுக்கு துப்பாக்கி தோட்ட விற்ற கேரளாவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
பந்தலுார் அருகே தேவாலா பகுதியை சேர்ந்த மணி மற்றும் சசிகுமார் ஆகியோர், வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக, 1.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, புதிய ரக நாட்டு துப்பாக்கியை வாங்கி உள்ளனர். நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ள, கேரளா மாநிலம் மருதா என்ற இடத்தில் இருந்து, துப்பாக்கியை வாங்கியதாக, இருவரும் தெரிவித்துள்ளனர்.
மருதா என்ற இடம் பந்தலுார் பஜாரை ஒட்டிய, கிளன்ராக் வனத்தை ஒட்டிய, கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ளது. துப்பாக்கியை வாங்கிய இருவரும், வனப்பகுதி வழியாக நடந்து, தேவாலா பகுதிக்கு வந்ததாக, விசாரணையில் தெரிய வந்தது.
இதன் மூலம், தமிழக எல்லை வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டை அதிகரித்துள்ளதும் தெரியவந்து உள்ளது.
இந்நிலையில், புதிய ரக நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தும், தோட்டாக்களை விற்பனை செய்த கேரள மாநிலம் மலப்புரம், எடவன்னா என்ற இடத்தைச் சேர்ந்த, சுனீர்அலி, என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தேவாலா போலீசார் கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் கூறுகையில், ''துப்பாக்கி வைத்திருந்த மணி என்பவருக்கும், சுனீர்அலி என்பவருக்கு ஏற்கனவே நல்ல தொடர்பு இருந்துள்ளது. அதனை தொடர்ந்து மணிக்கு, அதனை வேறு ஒருவரிடமிருந்து வாங்கி கொடுத்ததாகவும் சுனீர் அலி தெரிவித்துள்ளார். துப்பாக்கி வழங்கப்பட்ட இடம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என்றார்.

