/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரள மக்களின் விஷூ பண்டிகை கொன்றை மலர்கள் தட்டுப்பாடு
/
கேரள மக்களின் விஷூ பண்டிகை கொன்றை மலர்கள் தட்டுப்பாடு
கேரள மக்களின் விஷூ பண்டிகை கொன்றை மலர்கள் தட்டுப்பாடு
கேரள மக்களின் விஷூ பண்டிகை கொன்றை மலர்கள் தட்டுப்பாடு
ADDED : ஏப் 14, 2025 06:54 AM
குன்னுார் : நீலகிரியில் வாழும் கேரள மக்கள் கொண்டாடும், விஷூ பண்டிகை பூஜையின் போது பிரதானமாக வைக்கப்படும், கொன்றை மலர்கள் தட்டுப்பாடு காரணமாக, ஒரு சிறிய தண்டில் உள்ள மலர்கள், 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விஷூ பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு கனி காணும் நிகழ்ச்சியில், கொன்றை மலர்கள் வைத்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில், நடப்பாண்டு போதிய அளவு கொன்றை மலர்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் குன்னுார்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை ஓரங்களில் கொத்து, கொத்தாக இந்த மலர்கள் பூத்து இருக்கும் நிலையில் நடப்பாண்டு, பர்லியார், கோழிக்கரை உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே மலர்கள் பூத்துள்ளது.
இதனால், ஊட்டி, குன்னுார் மார்க்கெட் கடைகளில், ஒரு சிறிய தண்டில் உள்ள மலர்கள், 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதனை வாங்கவும் திரளான மக்கள் கூட்டம் காணப்பட்டனர். அந்த மலர்களும் சில மணிநேரங்களில் தீர்ந்தது.