/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இருளர் வாழ்க்கையை பிரதிபலித்த 'கோடை இருள்' திரைப்படம்
/
இருளர் வாழ்க்கையை பிரதிபலித்த 'கோடை இருள்' திரைப்படம்
இருளர் வாழ்க்கையை பிரதிபலித்த 'கோடை இருள்' திரைப்படம்
இருளர் வாழ்க்கையை பிரதிபலித்த 'கோடை இருள்' திரைப்படம்
ADDED : பிப் 07, 2024 11:19 PM
பாலக்காடு : பாலக்காடு அருகே நடக்கும், சர்வதேசத் திரைப்பட விழாவில், பழங்குடியின மக்கள் வாழ்க்கையை மையப்படுத்திய 'கோடை இருள்' என்ற தமிழ் திரைப்படம் மக்கள் மனதை கவர்ந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்துார் கைரளி திரையரங்கில், 'பாஞ்சஜன்னியம்' என்ற பெயரில் சர்வதேச திரைப்பட விழா கடந்த 2ம் தேதி துவங்கியது.
விழாவில், நேற்று மாலை, பழங்குடியின மக்கள் வாழ்க்கையை மையப்படுத்திய 'கோடை இருள்' என்ற தமிழ் திரைப்படம் திரையிடப்பட்டது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இது, பாடல் ஆசிரியர் மற்றும் ஆவணப்படம் இயக்குனருமான குட்டி ரேவதியின் முதல் திரைப்படமாகும். கேரளாவில் இவ்விழாவில், இந்த திரைப்படம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
இப்படம் இருளர் ஜாதியைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளை மட்டும் காட்டாமல், அவர்களின் கொண்டாட்டங்கள், சடங்குகள் மற்றும் ஏற்ற தாழ்வுகள் ஆகியவை பழங்குடியினருடன் ஒரு பிணைப்பை உருவாக்குகிறது.
மேலும், விழாவில் திரையிடப்பட்ட ஜோர்டானிய திரைப்படமான 'பர்ஹா' அதன் அரசியல் மற்றும் உணர்வுபூர்வமான செயல்பாட்டை மையப்படுத்தியது.
14 வயது பர்ஹாவை தாக்குதலிலிருந்து காப்பாற்றுவதற்காக தந்தை போராடுகிறார். அவள் கல்வி கனவு சிதைந்து போகிறது.
பர்ஹாவை போல் பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கதையை இந்த திரைப்படம் விளக்குகிறது.
விழாவில், 10க்கும் மேற்பட்ட குறும்படங்களும் வெளியிட்டன. சர்வதேச திரைப்பட விழா இன்று நிறைவு பெறுகிறது.

