கோடநாடு கொலை வழக்கு ஜூன் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை வழக்கு ஜூன் 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : ஏப் 24, 2026 05:31 PM
ஊட்டி: கோத்தகிரி கோடநாடு கொலை கொள்ளை வழக்கு, ஜூன் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. போலீசார், 316 பேரிடம் மறு விசாரணை நடத்தினர். இவ்வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதன் விசாரணை, நீதிபதி, செந்தில்குமார் முன்னிலையில் நேற்று வந்தது. குற்றம் சாட்டப்பட்ட சயான் மற்றும் ஜித்தின் ஜாய்; அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோருடன், சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் ஆஜராயினர்.
வழக்கு விசாரணையின் போ, அரசு தரப்பில், 'செல்போன் உரையாடல், தகவல் பரிமாற்றங்கள் குறித்து, குஜராத்தில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த தகவல்கள் இன்னும் கிடைக்காததால், விசாரணைக்கு கால அவகாசம் தேவை,' என, கேட்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைப்பில் ஆஜரான வக்கீல் விஜயன், கால அவகாசம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி வழக்கு விசாரணையை, வரும் ஜூன், 19ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
