/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளிக்கு கிராண்ட் ஜூரி தரவரிசை விருது
/
கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளிக்கு கிராண்ட் ஜூரி தரவரிசை விருது
கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளிக்கு கிராண்ட் ஜூரி தரவரிசை விருது
கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளிக்கு கிராண்ட் ஜூரி தரவரிசை விருது
ADDED : நவ 27, 2025 01:33 AM
கோத்தகிரி: கோத்தகிரி புனித ஜூட்ஸ் பள்ளிக்கு கிராண்ட் ஜூரி தரவரிசை விருது வழங்கப்பட்டுள்ளது.
மனித மூலதனம் வளர்ப்பு, தொடக்க மற்றும் இடைநிலை கல்வியில், 21ம் நுாற்றாண்டின் நடைமுறைகளை புதுமை படுத்துவதற்கும் பங்களிப்பு அளிக்கும் பள்ளிகளை பாராட்டும் விதமாக, விருதுகள் வழங்கப்படுகிறது.
அதில், 'இந்தியா பள்ளி கிராண்ட் ஜூரி' தரவரிசை 2025--26ம் ஆண்டு விருதுகள் பட்டியலில், கோத்தகிரி புனித ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லுாரி தேசிய அளவில், 9வது இடத்தையும், மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.
இதனை ஒட்டி, டெல்லி புல்மேன் ஏரோசிட்டியில் நடந்த விழாவில் பள்ளித் தலைவர் தன்ராஜ் முதல்வர் சண்முகராஜ் இயக்குனர் சஞ்சித் ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவப் படுத்தப்பட்டது.