/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடநாடு கொலை வழக்கு; ஜன., 24க்கு ஒத்திவைப்பு
/
கோடநாடு கொலை வழக்கு; ஜன., 24க்கு ஒத்திவைப்பு
ADDED : டிச 21, 2024 06:38 AM

ஊட்டி; நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜித்தின் ஜாய் நேரில் ஆஜரானார். அதேபோல, அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோரும் ஆஜராகினர். தவிர, சி.பி.சி.ஐ.டி., -- ஏ.டி.எஸ்.பி., முருகவேல் மற்றும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேரில் வருகை புரிந்தனர்.
நீதிபதி முரளிதரன் முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், 'இன்டர்போல் விசாரணை நடந்து வருகிறது. தற்போது புலன் விசாரணை மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடக்கிறது' என, நீதிபதியிடம் அரசு தரப்பு வக்கீல்கள் கூறினர். இதை தொடர்ந்து, விசாரணையை ஜன., 24ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

