/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பராமரிப்பு இல்லாத கோடநாடு காட்சிமுனை மரவியல் பூங்கா
/
பராமரிப்பு இல்லாத கோடநாடு காட்சிமுனை மரவியல் பூங்கா
பராமரிப்பு இல்லாத கோடநாடு காட்சிமுனை மரவியல் பூங்கா
பராமரிப்பு இல்லாத கோடநாடு காட்சிமுனை மரவியல் பூங்கா
ADDED : ஜூன் 23, 2025 10:30 PM

கோத்தகிரி; கோத்தகிரி கோடநாடு காட்சிமுனை மரவியல் பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா மையங்களில் கோடநாடு காட்சி முனை முக்கியத்துவம் பெறுகிறது. ஆண்டுதோறும், கோடை விழா உட்பட வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
இங்கு சிறுவர்களை மகிழ்விக்க ஏதுவாக, கடந்த பல ஆண்டுகளாக மரவியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. சிறுவர்களுக்கான ஊஞ்சல் இருக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் மரத்தினால் உருவாக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்கா, கடந்த பல ஆண்டுகளாக, போதிய பராமரிப்பு இல்லாமல், புதர் மண்டி கிடக்கிறது. இதனால், சுற்றுலா வரும் சிறுவர்கள் விளையாட முடியாமல், அதிருப்தியுடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, சுற்றுலா பயணிகள் உட்பட, சிறுவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில், பூங்காவை சீரமைப்பது அவசியம்.