/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கலை பொருளாக மாறிய கொட்டாங் குச்சிகள் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்க திட்டம்
/
கலை பொருளாக மாறிய கொட்டாங் குச்சிகள் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்க திட்டம்
கலை பொருளாக மாறிய கொட்டாங் குச்சிகள் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்க திட்டம்
கலை பொருளாக மாறிய கொட்டாங் குச்சிகள் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்க திட்டம்
ADDED : மார் 28, 2025 03:31 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே, துாக்கி எறியப்படும் கொட்டாங்குச்சிகளை கலைநயமிக்க பொருட்களாக கிராம பெண்கள் மாற்றி தொழில் முனைவோராக மாறி உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலை, காய்கறிகள் மற்றும் காபி விவசாயங்களில் மட்டுமே அதிகளவிலான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக தையல் பயிற்சி பெறுவதில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பந்தலுார் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பெண்களை ஒருங்கிணைத்து, உப்பட்டி பகுதியில், மத்திய அரசின் பசுமை திறன் மேம்பாட்டு பயிற்சியை, சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் இரண்டு மாதங்கள் வழங்கப்பட்டது.
அதில், கொட்டாங்குச்சிகளை கொண்டு, அழகிய பல்வேறு கலைநயமிக்க பொருட்களை உருவாக்கி காட்சிப்படுத்தி இருந்தனர். இதனை பார்த்த உள்ளூர் மக்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
பயிற்சி குறித்து, சி.பி.ஆர்., கள அலுவலர் குமாரவேலு கூறுகையில், ''இதன்ஒருங்கிணைப்பாளர் சுலோச்சனா என்பவர் கிராமத்து பெண்களை ஒருங்கிணைத்தார். பயிற்சியாளர்கள் ஹரிதா, ரமணி ஆகியோர் பெண்களுக்கு பயிற்சி அளித்ததில் பல்வேறு பொருட்களை உருவாக்கி தங்கள் திறமையை வெளிக்காட்டி உள்ளனர்.
இவர்களை ஒருங்கிணைத்து வங்கி கடனுதவி பெற்று, சிறு தொழில் முனைவோர்களாக மாற்றி சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான பொருட்களை உருவாக்கிய விற்பனை செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்,''என்றார்.
பயிற்சி நிறைவு பெற்று அனைவருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டு, வீட்டிலிருந்த படி, அவர்கள் பொருட்கள் தயாரிக்க தேவையான முதல்கட்ட தளவாடப் பொருட்களும் வழங்கப்பட்டது.