/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலூர் பஸ் ஸ்டாண்ட் பணிகளில்... ஆமை வேகம்!விரைந்து முடித்தால் பயணிகளுக்கு நிம்மதி
/
கூடலூர் பஸ் ஸ்டாண்ட் பணிகளில்... ஆமை வேகம்!விரைந்து முடித்தால் பயணிகளுக்கு நிம்மதி
கூடலூர் பஸ் ஸ்டாண்ட் பணிகளில்... ஆமை வேகம்!விரைந்து முடித்தால் பயணிகளுக்கு நிம்மதி
கூடலூர் பஸ் ஸ்டாண்ட் பணிகளில்... ஆமை வேகம்!விரைந்து முடித்தால் பயணிகளுக்கு நிம்மதி
ADDED : பிப் 10, 2024 01:09 AM

கூடலுார்; 'கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இட பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. பணிமனையை வேறு இடத்திற்கு மாற்றி, பஸ் ஸ்டாண்டை விரிவு படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அப்பகுதியில், முன்னாள் எம்.எல்.ஏ., திராவிடமணி தொகுதி நிதியிலிருந்து, 50 லட்சம் ரூபாய்; மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதி, 20 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. அதன்பின் நிதி ஒதுக்காத காரணத்தினால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், புதிய பஸ்ஸ்டாண்ட் அமைக்க கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் 4.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 2020 டிச., மாதம் பணிகள் துவங்கப்பட்டது.
பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்ட நிலையில், பஸ் ஸ்டாண்டை ஒட்டி இருந்த இரண்டு ராட்சத மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு, பணிமனைக்கு சென்று வர சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டது.
நிதி பற்றாக்குறையால் நிறுத்தம்
எனினும், நிதி பற்றாக்குறையால் மீண்டும் பணிகள் நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு, கூடுதலாக,67 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பஸ் ஸ்டாண்டில் இருந்து பணிமனைக்கு செல்வதற்காக சாலை அமைக்கும் பணிகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் பல ஆண்டுகளாக முடியாத காரணத்தால், அதனை ஒட்டிய மைசூரு தேசிய நெடுஞ்சாலை, அரசு பஸ்சை திருப்புவதற்கும், பயணிகளை ஏற்றி செல்வதற்கும் பயன்படுத்தி வருவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால், உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநில ஓட்டுனர்கள், பயணிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு தீர்வாக, 'பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைந்து முடித்து, கோடை சீசனுக்கு முன் திறக்க வேண்டும்,' என, பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
உள்ளூர் மக்கள் கூறுகையில், 'பஸ் ஸ்டாண்ட் பணி முடியாத காரணத்தால், அரசு பஸ்கள் மைசூரு தேசிய நெடுஞ்சாலைகளில், நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும் நிலை தொடர்கிறது.
இதனால், சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன விபத்துகள் அபாயமும் உள்ளது. எனவே பணிகளை விரைந்து முடித்து, பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்,' என்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'இம்மாதம் இறுதிக்குள் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி நிறைவு பெறும். தொடர்ந்து பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும்,' என்றனர்.