/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுார் புத்துார் வயல் கோவில் கும்பாபிஷேகம்
/
கூடலுார் புத்துார் வயல் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 09, 2025 10:02 PM

கூடலுார்; கூடலுார் புத்துார் வயல் மகாவிஷ்ணு கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்
மகா கும்பாபிஷேக விழா, 2ம் தேதி காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 3ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன், கலச அபிஷேகம் நடந்தது.
நேற்று, அதிகாலை, 3:55 மணிக்கு, கணபதி ஹோமம், மஹா பிம்ப பிரதிஷ்டை, பாணி, தாணம் சுப பிரதிஷ்டை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, 10:30 மணிக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை, 11:30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியும், மாலை மஹா தீபாராதனை திருவிளக்கு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்துள்ளனர்.