/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கவுரவம்
/
பொது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கவுரவம்
ADDED : பிப் 07, 2024 10:45 PM
குன்னுார் : குன்னுார் ஜோசப் மேல்நிலை பள்ளியில் பொது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, கல்வி சான்றிதழ் வழங்கி, பட்டமளிப்பு போன்று கவுரவம் அளிக்கப்பட்டது.
பள்ளி முதல்வர் பாதிரியார் ஜேக்கப் ஜோசப் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பாதிரியார் பாஸ்கா, சபை இல்ல தலைவர் டேமியன் வர்கீஸ் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராணுவ கமாண்டன்ட் பிஜூ வர்கீஸ், சான்றிதழ்கள், நினைவு பரிசுகள் வழங்கி, 'பொது தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல நிலையில் படித்து வெற்றி பெற வேண்டும்,' என்றனர்.
மாணவர்களுக்கு, பல்கலை கழகத்தில் நடத்தப்படும் பட்டமளிப்பு விழா போன்று நடத்தப்பட்டு, கவுரவ உடைகள் அணிந்து பங்கேற்றது அனைவரையும் கவர்ந்தது.

