ADDED : மார் 18, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில், கலை பண்பாட்டு துறை சார்பில், 45 கலைஞர்களுக்கு, பொற்கிழி மற்றும் பட்டயம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை சார்பில், அழிந்துவரும் கலையை மீட்கவும், நலிவடைந்த கலைஞர்களை கவுரவிக்கவும், 20-21-22 மற்றும் 2022-23ம் ஆண்டுகளில், கலை துறையினருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில், 'கலை இளமணி, கலை வளர்மணி, கலை நண்மணி, கலை சுடர் மணி, கலை நண்மணி மற்றும் கலை முதுமணி,' ஆகிய விருதுக்காக, வெற்றி பெற்ற மொத்தம், 45 கலைஞர்களுக்கு, முறையே, 4000, 6000, 10 ஆயிரம், 15 ஆயிரம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் என, காசோலை பொற்கிழி, பட்டயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

