ADDED : ஜன 19, 2024 11:18 PM

அன்னூர்:குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவில், தைப்பூச தேர்த்திருவிழாவில் நேற்று கொடியேற்றம் நடந்தது.
குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு கிராம சாந்தி பலிபீட பூஜையும், கலச பூஜையும், வேள்வி பூஜையும் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. வேள்வி பூஜை நடந்தது. வள்ளி தெய்வானை சமேதரராக கல்யாண சுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
அன்னூர், காரமடை, மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், முன்னாள் அறங்காவலர்கள் பங்கேற்றனர். காலை 10:00 மணிக்கு கல்யாண சுப்பிரமணியசாமி கிரிவலம் வந்து அருள் பாலித்தார். வருகிற 24ம் தேதி வரை, தினமும் காலை 10:00 மணிக்கு, சுவாமி கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 24ம் தேதி இரவு 10:00 மணிக்கு அம்மன் அழைப்பும் நடக்கிறது.
வருகிற 25ம் தேதி காலை 7:30 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. மடாதிபதிகள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர்.