/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அருள்மிகு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
அருள்மிகு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 12, 2025 10:49 PM
கோத்தகிரி; கோத்தகிரி கக்குளா கிராமம், எஸ். கைக்காட்டி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவை ஒட்டி, காலை, 9:15 மணிக்கு, மீன லக்கனத்தில், சோம சுந்தர குருக்கள் மற்றும் கவுரி சங்கர்சிவம் ஆகியோர், ஆகமசிற்ப சாஸ்திர முறைபடி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
தொடர்ந்து, கலச பூஜையும், அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜையுடன், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், கக்குளா சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, காணிக்கை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
விழாவில், ஆன்மிக சொற்பொழிவு, பஜனை, ஆடல், பாடல் இடம் பெற்றது. ஏற்பாடு களை, ஊர் தலைவர், கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

