/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கும்கி வசீமுக்கு வயிற்று போக்கு; யானை விரட்டும் பணியில் தொய்வு
/
கும்கி வசீமுக்கு வயிற்று போக்கு; யானை விரட்டும் பணியில் தொய்வு
கும்கி வசீமுக்கு வயிற்று போக்கு; யானை விரட்டும் பணியில் தொய்வு
கும்கி வசீமுக்கு வயிற்று போக்கு; யானை விரட்டும் பணியில் தொய்வு
ADDED : அக் 01, 2024 10:56 PM

பந்தலுார்: -பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை துரத்த வந்த கும்கி யானை வசீமுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
பந்தலுார் அருகே சேரம்பாடி சுற்று வட்டார பகுதிகளில், குடியிருப்புகளை ஒட்டி, 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த யானைகளை அடர்த்தியான வனப்பகுதிகள் விரட்டும் பணிக்காக, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானைகள் விஜய் மற்றும் வசீம் வரவழைக்கப்பட்டு, கடந்த, 4 நாட்களாக காட்டு யானைகளை துரத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், கும்கி வசீமுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதனால், நேற்று யானைகளை துரத்தும் பணியில் கும்கி யானைகள் ஈடுபடுத்தப்படவில்லை. வனச்சரகர் அய்யனார் தலைமையில் வனக்குழுவினர், கிராமங்களை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை துரத்தும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.