/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானைகளை விரட்ட வந்த கும்கிகள்; ஓய்வெடுத்து வருவதால் பணியில் தொய்வு
/
காட்டு யானைகளை விரட்ட வந்த கும்கிகள்; ஓய்வெடுத்து வருவதால் பணியில் தொய்வு
காட்டு யானைகளை விரட்ட வந்த கும்கிகள்; ஓய்வெடுத்து வருவதால் பணியில் தொய்வு
காட்டு யானைகளை விரட்ட வந்த கும்கிகள்; ஓய்வெடுத்து வருவதால் பணியில் தொய்வு
ADDED : அக் 07, 2024 12:19 AM

பந்தலுார் : பந்தலுார் அருகே சேரம்பாடி சுற்று வட்டார பகுதிகளில், காட்டு யானைகளை விரட்ட வந்த கும்கிகள், ஓய்வெடுத்து வருவதால் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
பந்தலுார் அருகே, சேரம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. குடியிருப்புகளை ஒட்டிய தேயிலை தோட்டம் மற்றும் புதர்களில், ஓய்வு எடுக்கும் இந்த யானைகள் இரவு, 7:00 மணிக்கு மேல் ஊருக்குள் வருகின்றன.
இந்த யானைகள், விவசாய பயிர்களை சேதப்படுத்துவது, மனிதர்களை தாக்குவது என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. இந்நிலையில், கடந்த வாரம் சேரம்பாடி பகுதியில், குடியிருப்பு அருகே வந்த புல்லட் என்ற காட்டு யானை, குஞ்சு முகமது என்பவரை தாக்கியதில், பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், 'அச்சுறுத்தும் யானைகளை, கும்கி யானைகள் உதவியுடன் அடர் வனத்திற்குள் விரட்ட வேண்டும்,' என வலியுறுத்தினர். இதற்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து, கும்கிகள் விஜய் மற்றும் வசீம் வரவழைக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் சேரம்பாடி கோரஞ்சால் பகுதியில், யானைகளை துரத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இரண்டு கும்கிகளால், 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை துரத்தும் பணியை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும், கும்கி வசீம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், ஒரு கும்கியால், காட்டு யானைகளை துரத்த முடியாத நிலையில், இந்தப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக, இரண்டு கும்கிகளும் ஓய்வெடுத்து வருவதால், வழக்கம்போல் வன பணியாளர்கள், யானைகளை துரத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, கூடுதலான கும்கிகளை வரவழைத்து, குடியிருப்புகள் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை துரத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

