/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானையை விரட்டும் பணியில் கும்கிகள்
/
காட்டு யானையை விரட்டும் பணியில் கும்கிகள்
ADDED : ஆக 24, 2025 11:11 PM
கூடலுார்; கூடலுார் ஓவேலி பகுதியில், பலரை தாக்கி கொன்ற காட்டு யானையை கண்காணித்து விரட்டுவதற்காக, முதுமலையிலிருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
கூடலுார் ஓவேலி நியூஹோப் பகுதியில் உள்ள, தனியார் எஸ்டேட்டில் பணியாற்றி வந்த மணி,63, சந்திரமோகன் ஆகியோர், 11ம் தேதி, ஏலக்காய் தோட்டம் வழியாக நடந்து சென்றனர். தோட்டத்தில் படுத்திருந்த காட்டு யானை திடீரென எழுந்து, அவர்களை விரட்டியது. இருவரும் ஓடினர். யானை துரத்தி சென்று மணியை தாக்கியது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சந்திரமோகன் உயிர் தப்பினர்.
இப்பகுதியில், மணி உட்பட பலரை தாக்கி கொன்ற, யானையை பிடிக்க வலியுறுத்தி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்காக, நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அளித்த உறுதியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த யானையை கண்காணித்து விரட்டுவதற்காக, முதுமலை கும்கி யானைகள், வசீம், விஜய் ஆகியவை, நேற்று ஓவேலி நீயூஹோப் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டன.
வனத்துறையினர் கூறுகையில், 'ஓவேலியில் சுற்றி வரும் யானையை கண்காணித்து விரட்ட, வனத்துறைக்கு உதவியாக, முதுமலையிலிருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.