/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
குன்னுார் செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 17, 2025 10:27 PM

குன்னுார்; குன்னுார் வெலிங்டன் லுார்துபுரம் செல்லாண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
குன்னுார் வெலிங்டன் பேரக்ஸ் அருகே உள்ள லுார்துபுரம் செல்லாண்டியம்மன் கோவிலில் புதுப்பிக்கும் பணிகள் நடந்தது. கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், கணபதி, பாலமுருகன், நவக்கிரகம், குதிரை வாகனத்தில் அமர்ந்த மதுரை வீரன், கருப்பராயன் சிலைகள் மற்றும் கோபுரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டன.
தொடர்ந்து கடந்த, 15ம் தேதி, கோபூஜை, கணபதி, நவகிரக, லக்ஷ்மி ஹோமங்களுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
நேற்று முன்தினம், 2ம் கால யாக பூஜை, கணபதி பூஜை, புண்யாக வாசனம், ரக் ஷாபந்தனம், நிலவு பூஜை வேதிகார்ச்சனை, நாடி சந்தானம், யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு ஆகியவை நடந்தன.
தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு கோபுர கலசம் பரிவார மூர்த்திகள் கொடிமரம் மற்றும் அன்னைக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், மகாபிஷேகம், தசதானம். தசதரிசனம், கோபூஜை, மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழுவினர், ஊர் மக்கள் மற்றும் இளைஞர் குழுவினர் செய்தனர்.

