/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குந்தா நீரேற்று மின் திட்ட பணி 30 அடி வரை நீர் வெளியேற்றம்
/
குந்தா நீரேற்று மின் திட்ட பணி 30 அடி வரை நீர் வெளியேற்றம்
குந்தா நீரேற்று மின் திட்ட பணி 30 அடி வரை நீர் வெளியேற்றம்
குந்தா நீரேற்று மின் திட்ட பணி 30 அடி வரை நீர் வெளியேற்றம்
ADDED : அக் 25, 2025 06:48 AM

ஊட்டி: குந்தா நீரேற்று மின்திட்டத்திற்காக இதுவரை, 30 அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் , தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஊட்டி அருகே காட்டு குப்பையில் குந்தா நீரேற்று மின் திட்ட பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 80 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், குறிப்பிட்ட இரு அணைகளில் தண்ணீர் வெளியேற்றினால் தான் அடுத்த கட்டப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, எமரால்டு, போர்த்த மந்து அணைகளிலிருந்து, 150 அடி வரை தண்ணீர் வெளியேற்ற திட்டமிடப்பட்டது. நீர் வெளியேற்றும் பணி கடந்த வாரம் துவங்கியது. வினாடிக்கு, 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஒரு மாத காலம் வெளியேற்ற மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இது வரை, 30 அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இன்னும், 120 அடி வரை தண்ணீர் வெளியேற்றப்படவேண்டியிருப்பதால், இரு அணைகளிலிருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
வெளியேற்றப்படும் தண்ணீரால் பில்லுார் கூட்டு குடிநீர் திட்டத்தில், தேவைக்கேற்ப தண்ணீரை சேமித்து வைத்து, கோவை மக்களுக்கு தடையின்றி குடிநீரை வினியோகிக்கலாம்.

