/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கீழ் குந்தா பேரூராட்சி அ.தி.மு.க., தெரு முனை பிரசாரம்
/
கீழ் குந்தா பேரூராட்சி அ.தி.மு.க., தெரு முனை பிரசாரம்
கீழ் குந்தா பேரூராட்சி அ.தி.மு.க., தெரு முனை பிரசாரம்
கீழ் குந்தா பேரூராட்சி அ.தி.மு.க., தெரு முனை பிரசாரம்
ADDED : மார் 11, 2024 01:23 AM
மஞ்சூர்:மஞ்சூர் கீழ்குந்தா பேரூராட்சி அ.தி.மு.க., சார்பில் தெரு முனை பிரசாரம் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, பேரூராட்சி அ.தி.மு.க., செயலாளர் சிவராஜ் தலைமை வகித்தார். குந்தா கிழக்கு ஒன்றிய செயலாளர் வசந்தராஜன், அவை தலைவர் துரைசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை கழக பேச்சாளர் விஜயலட்சுமி, ரவி ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத் பங்கேற்று பேசுகையில், '' லோக்சபா தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.''என்றார். கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.