/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வன பாதுகாப்பு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை: மாவட்ட வன அலுவலர் வருத்தம்
/
வன பாதுகாப்பு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை: மாவட்ட வன அலுவலர் வருத்தம்
வன பாதுகாப்பு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை: மாவட்ட வன அலுவலர் வருத்தம்
வன பாதுகாப்பு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை: மாவட்ட வன அலுவலர் வருத்தம்
ADDED : அக் 04, 2024 10:09 PM
ஊட்டி : வன உயிரின வார விழாவை முன்னிட்டு, ஊட்டி அரசு கலைக் கல்லுாரி வன உயிரின உயிரியல் துறை சார்பில், புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அதில், நீலகிரி உயிர் சூழல் மண்டலத்தில் எடுக்கப்பட்ட வன விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீர் வாழ்வன மற்றும் தாவரங்களின் புகைப்படங்களுடன், வன உயிரின உயிரியல் துறை மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் ராமலட்சுமி தலைமை வகித்து பேசினார்.
வன உயிரின உயிரியல் துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன் பேசுகையில், ''வனவியல் படித்த மாணவர்கள் நேரடி ரேஞ்சர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், 'வன உயிரின உயிரியல் முதுகலை பட்டப்படிப்பு படித்த மாணவர்களையும் சேர்க்கலாம்,' என, சென்னை ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உயிர் பன்மையை நாம் அனுபவித்து விட்டு, அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக விட்டு செல்வது நமது கடமை. சுகாதாரமான தண்ணீரும், காற்றும் கிடைக்க வேண்டும் எனில், கண்டிப்பாக வன வளம் பாதுகாக்கப்பட வேண்டும்,'' என்றார்.
போதிய விழிப்புணர்வு இல்லை
புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம் பேசியதாவது:
வன பாதுகாப்பு குறித்து, பெரும்பாலான மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை. இதுகுறித்து ஆர்வமும், அறிவும் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
வன பாதுகாப்பு குறித்து குறைந்த அளவிலான மக்களிடம் மட்டுமே, விழிப்புணர்வும், அறிவும் உள்ளது. அவர்கள் மூலமாகதான், வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வன பாதுகாப்பில், மாணவர்களின் பங்களிப்பு முக்கியமானது.
வன பாதுகாப்பு, வன ஆக்கிரமிப்பு அகற்றுவது போன்றவை வனத்துறையில் முக்கிய பணியாகும். இவ்வாறு, அவர் பேசினார்.