/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் மக்களுக்கான அடிப்படை பணியில் தொய்வு; அரசு நிதியை வீணடிப்பதால் அதிருப்தி
/
குன்னுாரில் மக்களுக்கான அடிப்படை பணியில் தொய்வு; அரசு நிதியை வீணடிப்பதால் அதிருப்தி
குன்னுாரில் மக்களுக்கான அடிப்படை பணியில் தொய்வு; அரசு நிதியை வீணடிப்பதால் அதிருப்தி
குன்னுாரில் மக்களுக்கான அடிப்படை பணியில் தொய்வு; அரசு நிதியை வீணடிப்பதால் அதிருப்தி
ADDED : மே 19, 2025 08:43 PM

குன்னுார்; குன்னுாரில் பல்வேறு இடங்களில் மக்களுக்கான அடிப்படை பணியில் தொய்வு ஏற்பட்டு வருவதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
அதில், குன்னுார், 3வது வார்டு டி.டி.கே., சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது. 73.5 லட்சம் ரூபாய் மதிப்பில் நகராட்சி சீரமைப்பு பணிகளை கடந்த பிப். 21ல் மேற்கொண்டது. சாலை பணிகளில், தரமில்லாததால் மக்கள் ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ' அப்பகுதியில் கன்டோன்மென்ட் சாலைக்கு வாகனங்கள் செல்ல கூடாது,' என்பதற்காக வாரியம் சார்பில், ஏற்கனவே தடைகற்கள் வைத்த பழைய கவுடர் டாக்கீஸ் பகுதியில், நகராட்சி பொது நிதியில், 42 லட்சம் ரூபாய் செலவு செய்து, தடுப்புச்சுவர் எழுப்பியது சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால், அப்போது இங்கு முறைகேடாக சாலை அமைக்கும் பணி, பாதியில் நிறுத்தப்பட்டது.
அதே நேரம், 'குன்னுார் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே, ஆயிரக்கணக்கான வாகனங்கள் டி.டி.கே., சாலை நுழைவு பகுதியில் தனியார் ஓட்டல் முன்புறம் கான்கிரீட் சாலை அமைத்தல்; டி.டி.கே., சாலையில் இருபுறமும் சமதள கால்வாய் அமைத்தல் பணி,' என, கூறி, பொது நிதியில், 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள கடந்த மார்ச், 3ல் டெண்டர் விடப்பட்டது.
இதில், சமதள கால்வாய் என்ற பெயரில் டி.டி.கே., சாலையோரத்தில், கண்துடைப்புக்காக சிமென்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நிறுத்தப்பட்ட வாகனங்களை கூட அகற்றாமல் அதனை சுற்றி சிமென்ட் தளம் அமைத்ததும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டி.டி.கே., நுழைவு சாலை, தனியார் ஓட்டல் முன்பு கான்கிரீட் சாலையும் இதனால், அமைக்கவில்லை. இதனால், உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'டி.டி.கே., சாலை சீரமைப்பில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சியினருக்கான பணிகள் மேற்கொள்ளும் நகராட்சி, குமரன்நகர், இந்திரா நகர், ஆழ்வார்பேட்டை உட்பட ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தருவதில் மெத்தனம் காட்டுகிறது. எனவே, மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து இதற்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.