ADDED : ஆக 17, 2025 09:31 PM

குன்னுார்; குன்னுார் அருகே பழைய அருவங்காடு முத்துமாரியம்மன் கோவிலில், ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, 108 திருவிளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடந்தது. அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தப்பட்டது.
விளக்கு பூஜையில் அரிசி, மஞ்சள், வளையல், மஞ்சள் கயிறு வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டது. அர்ச்சகர்கள் மந்திரங்கள் ஓத, மகளிரின் திருவிளக்கு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
*பந்தலுார் அருகே பொன்னானி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, காலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு, இரவு திருவிளக்கு பூஜை மற்றும் அம்மனுக்கு நீராட்டுதல், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பூஜைகளை அர்ச்சகர் சண்முகம் மற்றும் திரு விளக்கு பூஜைகளை கோவில் தலைவர் சிவக்குமார் தலைமையில் செய்யப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.