/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் நில அளவை கள பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஊட்டியில் நில அளவை கள பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 15, 2025 08:12 PM

ஊட்டி; ஊட்டி கலெக்டர் அலுவலகம் எதிரே நில அளவை களப் பணியாளர்கள், 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நில அளவை களப் பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் அப்துல் காதர் தலைமை வகித்தார். அதில், 'களப்பணியாளர்களின் ஒட்டு மொத்த பணியினையும் கருத்தில் கொள்ளாமல் உட்பிரிவு பட்டா மாறுதல் பணியினை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும்; நில அளவர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
துணை ஆய்வாளர்,ஆய்வாளர்கள் ஊதிய முரன்பாட்டை களைந்திட வேண்டும்; ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற அளவர்களை நியமிப்பதை முற்றிலும் கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட வேண்டும்; விதி திருத்தத்தின் வாயிலாக நில அளவை பதிவேடுகள் துறை உயர் அலுவலர்களின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்,' என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க நிர்வாகள் பலர் பங்கேற்றனர்.