/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்ட துவக்க விழா
/
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்ட துவக்க விழா
ADDED : ஜூலை 08, 2025 08:30 PM
குன்னுார்; குன்னுார் இளித்தொரை கிராமத்தில், தோட்டக்கலை துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்ட துவக்க விழா நடந்தது.
தமிழக அரசு கொறடா ராமச்சந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ''அனைவருக்கும் ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகளை சாகுபடி செய்து, அவற்றை உண்பதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு இன்றி ஆரோக்கிய மான வாழ்விற்கு அடித்தளமாக அமையும்.
அதன்படி,  கொடி அவரை, பட்டாணி, கீரை விதைகள் மற்றும் பழப்பயிர்களான வெண்ணெய் பழம், தாட்புட், எலுமிச்சை நாற்றுக்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படுகின்றன,'' என்றார்.
தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலாமேரி, துணை இயக்குனர் நவநீதா முன்னிலை வகித்தனர்.
உதவி இயக்குனர்கள் அனிதா, கிருஷ்ணன் சந்திரன் உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர். சிம்ஸ் பூங்கா தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

