/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்
/
சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்
ADDED : அக் 30, 2025 10:46 PM
ஊட்டி:  ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் லட்சுமி பல்யா தலைமை வகித்தார். நீலகிரி எஸ்.பி., நிஷா முன்னிலை வகித்தார்.
மாவட்டத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது; கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, லாட்டரிகளை முழுமையாக தடுப்பதுடன், கள்ள மதுபான விற்பனை, கஞ்சா மற்றும் புகையிலை புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தவிர, மாவட்டத்தில் சாலை பாதுகாப்பதன் அவசி யம் குறித்தும் விவாதிக்கப் பட்டது. மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று, பிரச்னைகளுக்கு தேவையான தீர்வு காண வேண்டும். என, கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இதில், காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

